கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பில் இந்தியா உலகளவில் உற்பத்தி செய்யும் திறனையும், புதுமையையும் காட்டியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
உலகளாவிய உயிர் இந்தியா நிகழ்ச்சியில் பேசிய அவர், கொரோனாவிற்கு எதிரான போராட்டம் தற்போது மிகவும் நெருக்கடியான நிலையில் உள்ளது என்றும், ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் திடீரென உயர்ந்துவருவதாகவும் கவலை தெரிவித்தார்.
வைரஸின் பல்வேறு வகைகளில் நிச்சயமற்ற தன்மைகள் உள்ளன என்று குறிப்பிட்ட அவர், இந்தியா உலக அளவில் உற்பத்தியாளராகவும், ஒரு புதுமையாளராகவும் உள்ளதாக கூறினார்.