அரியானாவில் தனியார் துறை வேலை வாய்ப்புகளில் 75 சதவீதத்தை சொந்த மாநில மக்களுக்கே வழங்கும் இடஒதுக்கீடு சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவுதாலா, அரியானா இளைஞர்களுக்கு மிக மகிழ்ச்சியான நாள் இது என்றார். அனைத்து தனியார் நிறுவனங்களிலும் 75 சதவீத வேலைவாய்ப்பை சொந்த மாநில இளைஞர்களே பெற முடியும் என்று கூறினார்.
இது தொடர்பான அரியானா சட்டமசோதா கடந்த ஆண்டு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி மாதத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரையிலான ஊதியம் வழங்கும் வேலைகளில், சொந்த மாநில மக்களை பணியமர்த்த வேண்டும். இல்லையெனில் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.