இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் தடுப்பூசி பணிகளில் 39 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
2-வது கட்டமாக மக்களுக்கு ஊசி போடும் பணி நாடு முழுவதும் 21 ஆயிரம் மையங்களில் நடைபெறு வதாகவும், அதில் 11 ஆயிரம் தனியார் மருத்துவமனைகளும் அடங்கும் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறியுள்ளார்.
நாடுமுழுவதும் நேற்று 4 லட்சத்து 27 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டதாகவும், 39 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.