அசாமில் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற பிரியங்கா காந்தி தொழிலாளர்களுடன் சேர்ந்து தேயிலை பறித்ததுடன் அவர்களின் வீட்டில் உணவருந்தி மகிழ்ந்தார்.
அசாமில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி அங்குச் சுற்றுப் பயணம் செய்து பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
அதனிடையே விஸ்வநாத் என்னுமிடத்தில் ஒரு தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற பிரியங்கா, தொழிலாளரைப் போல் பின்புறத்தில் கூடையைக் கட்டிக்கொண்டு தேயிலைகளைப் பறித்தார்.