வேளாண் ஆய்வு மற்றும் வளர்ச்சிப் பணிகளில் தனியார் துறை ஈடுபடும் நேரம் வந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய நிதி நிலை அறிக்கையில் வேளாண் துறைக்கான நடவடிக்கை குறித்து காணொலியில் பேசிய அவர், இதுவரை வேளாண் ஆய்வு மற்றும் மேம்பாட்டு பணிகளில் அரசே தனது பங்களிப்பை செய்துள்ளது என்றார். இப்போது இந்த துறையில் தனியாரும் ஈடுபட வேண்டிய நேரம் வந்து விட்டதாக அவர் குறிப்பிட்டார்.
வேளாண் பொருள் உற்பத்தி அதிகரித்துள்ள நிலையில், உணவு பதப்படுத்தும் துறையில் புரட்சி ஏற்பட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். கால்நடைப் பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் 16 லட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளதாக மோடி தெரிவித்தார்.