டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, செவிலியர்களிடம் அவர்கள் எங்கிருந்து வந்துள்ளார்கள் என விசாரித்துள்ளார்.
புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மூன்றாண்டுகளாகச் செவிலியராகப் பணியாற்றி வருகிறார். அவரும் கேரளத்தைச் சேர்ந்த செவிலியர் ரோசம்மாவும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று தடுப்பூசி போட்டுவிட்டனர்.
அதன்பின் அவர்களிடம் பேசிய பிரதமர், தடுப்பூசி போடப்பட்டுவிட்டதா? என்றும், தனக்கு ஒன்றும் தெரியவில்லையே என்றும் வினவியுள்ளார்.
இது குறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய செவிலியர் நிவேதா, தடுப்பூசி போட்டுக்கொள்ளப் பிரதமர் வருவது தனக்கு இன்று காலையில் தான் தெரியும் என்று குறிப்பிட்டார்.