19 செயற்கைகோள்களுடன் பிஎஸ்எல்வி-சி51 ராக்கெட் காலை விண்ணில் ஏவப்பட்ட நிலையில், அதில், இந்திய பெருங்கடல் எல்லையை கண்காணிக்கும் சிந்து நேத்ரா செயற்கைக்கோளும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
டிஆர்டிஓ இளம் விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்ட சிந்து நேத்ரா செயற்கைக்கோள், இந்திய பெருங்கடலில் போர் மற்றும் சரக்கு கப்பல்களின் செயல்பாட்டை துல்லியமாக கண்காணித்து தகவல் தெரிவிக்க வல்லது.
மேலும் தென்சீன கடற்பகுதி அல்லது வளைகுடா கடற்பகுதி மற்றும் சீன பாகிஸ்தான் எல்லையையும் இதன் மூலம் காண்காணிக்க முடியும் என்றும், இதனை தரையில் இருந்து தொடர்பு கொண்டு இயக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.