வரும் இரண்டாண்டுகளில் மேலும் ஒருகோடி இலவசச் சமையல் எரிவாயு இணைப்புகளைக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளதாகப் பெட்ரோலிய அமைச்சகச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பெண்களின் இன்னலைக் குறைக்கும் வகையிலும் மாசில்லா எரிபொருளைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்கும் வகையிலும் பெண்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மத்திய பாஜக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தத் திட்டத்தில் 4 ஆண்டுகளில் எட்டுக்கோடி இலவசச் சமையல் எரிவாயு இணைப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதாகப் பெட்ரோலிய அமைச்சகச் செயலாளர் தருண் கபூர் தெரிவித்துள்ளார். இதனால் நாட்டில் எரிவாயு இணைப்புகளின் எண்ணிக்கை 29 கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.