புதுச்சேரியில் பாஜக ஆட்சி மலர்ந்தால், பல்வேறு நலத்திட்டங்களுடன் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு உட்பட்ட காரைக்காலில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய அவர், குறைந்தபட்சம் 40 சதவீத இளைஞர்களுக்கு வேலை கிடைக்க பாஜக நடவடிக்கை எடுக்கும் என்று உறுதிஅளித்தார்.
மத்திய அரசின் திட்டங்களை நாராயணசாமி அரசு செயல்படுத்தவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார்.முன்னதாக சட்டப்பேரவைத் தேர்தல் வியூகம் தொடர்பாக பாஜக நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.
பின்னர், முன்னாள் MLA ஜான் குமார், சபாநாயக் சிவக்கொழுந்தின் சகோதரர் ராமலிங்கம்,திமுக முன்னாள் MLA வெங்கடேசன் உள்ளிட்டோர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தனர்.