பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்துப் பால் விலையை லிட்டருக்கு நூறு ரூபாயாக உயர்த்த அரியானாவின் ஹிசாரில் நடைபெற்ற விவசாயிகள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லி எல்லைகளில் விவசாயிகள் நவம்பர் 26 முதல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் அதன் எதிரொலியாக இன்றியமையாப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில் அரியானா மாநிலம் ஹிசாரில் விவசாயிகளின் கூட்டம் நடைபெற்றது. அதில் பால் விலையை லிட்டருக்கு நூறு ரூபாயாக உயர்த்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.