இஸ்ரோ ஏவிய செயற்கைக்கோளில் பிரதமர் நரேந்திர மோடியின் உருவமும் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளதுடன் பகவத்கீதையும் வைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி சி 51 ராக்கெட் மூலம் இன்று விண்ணில் ஏவப்பட்ட 19 செயற்கைக்கோள்களில் இஸ்ரோவின் சதீஷ் தவான் சாட்டும் ஒன்று. இந்தச் செயற்கைக்கோளின் மேற்பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் படமும் பெயரும் பொறிக்கப்பட்டுள்ளது.
கீழ்ப் பகுதியில் இஸ்ரோ தலைவர் சிவன், அறிவியல் செயலாளர் உமா மகேஸ்வரன் மற்றும் 25ஆயிரம் பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
பகவத் கீதை பதியப்பெற்ற நினைவு அட்டையும் அதில் வைக்கப்பட்டுள்ளது.