மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் விதிகளை மீறிக் கட்டப்பட்ட அடுக்குமாடிக் கட்டடத்தை மாவட்ட நிர்வாகத்தினர் வெடி வைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கினர்.
போபாலில் கூட்டுறவுச் சங்கத்துக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமித்து மூன்றடுக்கு வணிக வளாகம் கட்டப்பட்டிருந்தது.
இது குறித்துக் கூட்டுறவுச் சங்கங்களின் மாவட்டப் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில் அந்தக் கட்டடத்தை மாவட்ட நிர்வாகத்தினர் வெடிவைத்துத் தகர்த்துத் தரைமட்டமாக்கினர்.