ஆந்திர மாநிலம் திருப்பதியில் அடுத்த மாதம் 4ந்தேதி நதிநீர் பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்காக, தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட 8 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள், நிர்வாகிகள் பங்கேற்கின்றனர்.
இந்த கூட்டத்தில் காவிரி பிரச்சினை, முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை ஆகியவை பற்றி ஆலோசிக்கப்படுகிறது.
மேலும், தென்னிந்தியாவின் முக்கிய நதிகளான கோதாவரி, கிருஷ்ணா, காவேரி, பெண்ணாறு, மகாநதி ஆகியவற்றை இணைத்து நதிநீர் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு காண்பது பற்றியும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது.