மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மற்றும் அச்சல்பூர் நகரங்களில் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 8ஆம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மக்கள் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அத்தியாவசியப் பொருட்களை வாங்க மட்டும் வெளியே வரலாம் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி வகுப்புகள், உடற்பயிற்சிக்கூடம், நீச்சல் குளம், திரையரங்குகள் மூடப்பட்டிருக்கும் என்றும், பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யவத்மாலில் 40 மணி நேரம் முழு ஊரடங்கும், நாக்பூர் மற்றும் புல்தானாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.