இந்தியா-பாகிஸ்தான் ராணுவ உயரதிகாரிகள் பேச்சு நடத்தி எல்லையில் சண்டை நிறுத்த உடன்படிக்கையை உறுதியாக கடைபிடிக்க ஒப்புக்கொண்டதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மகிழ்ச்சியும் வரவேற்பும் தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தைகள் மூலமாக நிரந்தர அமைதியை மேற்கொள்ள இந்தியா முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நல்லெண்ண அடிப்படையில் பாலகோட் தாக்குதலின் போது சிறைபிடிக்கப்பட்ட இந்திய விமானப்படை அதிகாரி அபிநந்தன் விடுவிக்கப்பட்டதை அவர் நினைவுகூர்ந்தார்.
பாகிஸ்தான் அரசு வெளியிட்ட 2 நிமிட வீடியோவில் பாலகோட் தாக்குதலில் சிறைப்பிடிக்கப்பட்ட விங் கமாண்டர் அபிநந்தன் தம்மை பாகிஸ்தான் ராணுவம் கௌரவமாக நடத்துகிறது என்று பேசுவது போன்ற காட்சி இடம்பிடித்துள்ளது.
அந்த வீடியோ காட்சி பல இடங்களில் வெட்டப்பட்டுள்ளது.