இணையதள பராமரிப்பு பணிக்காக இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது மத்திய அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு ஊசி போடப்பட்டு வருகிறது.
ஒரு கோடியே 34 லட்சத்துக்கும் மேற்பட்ட டோஸ்கள் போடப்பட்டு உள்ள நிலையில், 2-ம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகளுக்கு நாளை மறுநாள் முதல் தடுப்பூசி போடப்படுகிறது.
கொரோனா தடுப்பூசி பெறும் பயனாளர்கள் ‘கோ-வின்’ இணையதளத்தில் பதிவு செய்துதான் தடுப்பூசி போட்டு வருகின்றனர்.
இந்த இணையதளத்தில் பராமரிப்பு பணிகள் நடக்கிறது.எனவே நாடு முழுவதும் இன்றும் நாளையும் தடுப்பூசி போடும் பணிகள் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.