தெற்கு ரயில்வே ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் பயணிகளின் வசதிக்காக 20 முன்பதிவு இல்லா விரைவு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.
இந்த ரயில்களின் இயக்கம் மார்ச் 15 முதல் ஏப்ரல் 2 வரையுள்ள நாட்களில் தொடங்க உள்ளது. தமிழகத்தில் கோவை - மேட்டுப்பாளையம், விருத்தாசலம் - சேலம், கரூர் - திருச்சி, சென்னை - புதுச்சேரி, தாம்பரம் - விழுப்புரம், திருச்சி - காரைக்குடி ஆகிய வழித்தடங்களில் முன்பதிவு இல்லா விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
முன்பதிவில்லாப் பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொண்டு இந்த ரயில்களில் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத் தக்கது.