மத்தியப் பிரதேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பட்டால் இரவு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரித்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் போபால், இந்தூர், பீட்டல், சிந்த்வாரா, திண்டோரி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், மகாராஷ்டிரத்தில் கொரோனா பரவல் கடுமையாக அதிகரித்து வருவதால் வேலை வாய்ப்புக்காக அந்த மாநிலத்துக்குச் செல்ல வேண்டாம் என மக்களைக் கேட்டுக்கொண்டார்.
ஊரடங்கை அறிவிப்பது பொருளாதாரத்தைப் பாதிக்கும் என்பதால் அதை விரும்பவில்லை என்றும், பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவித்தார்.