அரசுப் பணிகளில் தகுதியில்லாத நபர்களைப் பணியமர்த்துவது, அரசமைப்புச் சட்டத்தை மீறும் செயல் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்ட் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு பட்டியல் தொடர்பான மேல் முறையீட்டு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.
அதை விசாரித்த நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், இந்திரா பானர்ஜி ஆகியோரைக் கொண்ட அமர்வு, மனுவைத் தள்ளுபடி செய்தது.
அப்போது பேசிய நீதிபதிகள்,அரசுப் பணிகளில் தகுதியுள்ளவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினர். தகுதியில்லாதவர்களை நியமிப்பது அரசமைப்புச் சட்டத்தின் 14, 16-ஆவது பிரிவுகளை மீறுவதாகும் என்றும் குறிப்பிட்டனர்.