மெட்ரோ மேன் என்று அழைக்கப்படும் ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்து கொண்டார்.
கேரள மாநிலம் சங்கரம்குளத்தில் பாஜக தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடந்த விஜய் யாத்திரை என்ற கூட்டத்தில் கலந்துகொண்ட ஸ்ரீதரன் கட்சியில் சேர்ந்து கொண்டார். இதை தொடர்ந்து உரையாற்றிய அவர், இது தனது வாழ்க்கையின் மிக முக்கிய தருணங்களில் ஒன்றாகும் எனக் கூறினார்.
88 வயதான தமக்கு பாஜகவில் பணியாற்ற வாய்ப்பு அளித்தமைக்கு நன்றி கூறிய அவர், வரும் கேரள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளர்.