பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் தொடர்ந்து கர்நாடக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்த அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இதுகுறித்து பெங்களூரு விதான சவுதாவில் நேற்று போக்குவரத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான லட்சுமண் சவதி செய்தியாளர்களை சந்தித்தார்.
பேருந்து கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் எடியூரப்பா அனுமதி அளித்தால் மட்டுமே பெங்களூருவில் மாநகர பி.எம்.டி.சி. பஸ்களின் கட்டணத்தை உயர்த்தப்படும்.
அதே நேரத்தில் தொலைதூரப் பேருந்துகளான கே.எஸ்.ஆர்.டி.சி. பஸ்களின் கட்டணம் உயர்த்தப்படாது என்று தெரிவித்தார்.