நாட்டில் 25 விளையாட்டு அரங்கங்களுக்கு நேரு குடும்பத்தினரின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார்.
அகமதாபாத்தில் உள்ள மாதேரா கிரிக்கெட் விளையாட்டு அரங்கத்துக்கு நரேந்திர மோடியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. வல்லப் பாய் பட்டேலின் பெயரை நீக்கிவிட்டு மோடியின் பெயரைச் சூட்டியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதற்குப் பதிலளித்த முதலமைச்சர் விஜய் ரூபானி அந்த விளையாட்டரங்கம் மாதேரா அரங்கம் என்றே அழைக்கப்பட்டதாகவும், அதற்கு சர்தார் பெயர் பட்டேல் பெயர் சூட்டப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் 25 விளையாட்டு அரங்கங்களுக்கு ஜவகர்லால் நேரு, இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.