பிற நாடுகளில் இருந்து வரும் பயங்கரவாதத் தாக்குதலைத் தடுக்க முன்கூட்டித் தாக்குதல் நடத்த ஒரு நாட்டுக்கு உரிமை உண்டு என இந்தியாவுக்கான ஐநா தூதர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா.வில் மெக்சிகோ ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில் இந்தியத் தூதர் நாகராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மூன்றாம் நாடுகளில் இருந்துகொண்டு தாக்குதல் நடத்தும் பயங்கரவாத அமைப்புகள் மீது தற்காப்புக்காகத் தாக்குதல் நடத்தும் நிலைக்குப் பல நாடுகள் தள்ளப்படுவதாகத் தெரிவித்தார்.
இது குறித்துப் புகார் தெரிவித்தும் அடைக்கலம் அளிக்கும் நாடுகள் அது குறித்து நடவடிக்கை எடுக்காததுடன் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் பதான்கோட், ஊரி, புல்வாமா ஆகிய இடங்களில் தாக்குதல் நடத்தியதை அவர் குறிப்பிட்டார்.