மகாராஷ்டிராவில் உள்ள நலா சோபாரா நகரின் நிர்மல் கிராமத்தில் வசிப்பவர் கணபத் நாயக். 80 வயதாகும் இவர், அதே கிராமத்தில் ரைஸ் மில் ஒன்றை நடத்திவருகிறார்.
அண்மையில், அவருக்கு வந்த கரண்ட் பில்லை பார்த்து, உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்படி என்னதான் அந்த பில்லில் இருந்தது?
நாயக்கின் கரண்ட் பில் 80 கோடி ரூபாயாக வந்திருந்தது. பில்லை கண்டு நாயக்கின் குடும்பத்தினர் அரண்டு போயினர் . ஒரு வேலை ஒட்டுமொத்த மாவட்டத்திற்குமான பில் தங்களுக்கு வந்துவிட்டதோ என்று எண்ணி, கையிலிருந்த பில்லை பல முறை சரி பார்த்தனர். ஆனால் பில்லில் தெளிவாக, நாயக்கின் பெயர் தான் இருந்தது.
இதனைப் பற்றிய தகவல், மும்பை மின்வாரியத்தைச் சென்றடைய, பில்லை பார்த்த ஊழியர்கள், மீட்டரில் ஏற்பட்ட கோளாறால், 8 லட்சத்திற்கு வரவேண்டிய பில், 80 கோடியாக மாறிவிட்டதாக கூறி அதனைத் திருத்தம் செய்து, மீண்டும் கணபத் நாயக்கிற்கு புது பில்லை அனுப்பியுள்ளனர்.