உத்தரக்கண்ட் மாநிலம் சாமோலியில் பனிச்சரிவின்போது உருவான ஏரியில் கற்கள், மரங்களை அகற்றி இயல்பான நீரோட்டத்துக்கு வழி செய்யப்பட்டுள்ளது.
சாமோலி மாவட்டத்தில் பனிச்சரிவு ஏற்பட்டதில் ரிசிகங்கா ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் அறுபதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பனிச்சரிவு ஏற்பட்ட இடத்தில் பாறைகளும் மரங்களும் அடைத்துக்கொண்டதில் ஒரு ஏரி உருவானது. அந்த ஏரி திடீரென உடைந்தால் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து இந்தோ திபெத் எல்லைக் காவல் படையினர் அந்த இடத்துக்குச் சென்று ஆற்றின் நீரோட்டத்துக்கு இடையூறாக இருந்த மரங்களை அகற்றினர்.
இதையடுத்து ஆற்றின் நீரோட்டம் தடையின்றிச் செல்கிறது.