ஒடிசா மாநிலம் கியோஞ்சர் வனப்பகுதியில் பரவிய காட்டுத் தீயால் ஆயிரக்கணக்கான மரங்கள் தீயில் கருகி சாம்பலாகின. இரவு நேரத்தில் இங்குள்ள வனத்தில் தீப்பிடித்தது.
மரங்களை வளர்ப்பதற்காக வனத்துறையினர் இங்குள்ள சிறிய காடுகளில் பல ஆண்டுகளாக மேற்கொண்ட அத்தனை முயற்சிகளும் தீ விபத்தால் வீணாகிப் போகின.
தீ மிகவும் உக்கிரமாகப் பரவியதையடுத்து வனப்பகுதி முழுவதும் தீக்கு இரையாகியது.
தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்த உயிரைப்பணயம் வைத்து 8 மணி நேரம் போராடினர். காட்டுக்குத் தீ வைத்த விஷமிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்