கம்ப்யூட்டர்கள், லேப்டாப், டேப்லட் போன்ற ஐடி ஹார்டுவேர் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இதனை தெரிவித்தார். இத்திட்டத்தின்படி, 4 ஆண்டு காலத்துக்கு தோராயமாக 7,350 கோடி ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகை வழங்கப்பட இருக்கிறது.
இதன் மூலம் எலக்ட்ரானிக்ஸ் கருவிகள் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில், இந்தியா உலகளாவிய மையமாகவும், ஐடி ஹார்டுவேர் ஏற்றுமதி மையமாகவும் உருமாறும்.
இத்திட்டம் ஒரு லட்சத்து 80 ஆயிரம் நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே மருந்து தயாரிப்பிற்கும் 9 ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.