புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
புதுச்சேரியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பதவி விலகியதால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்தது. இதையடுத்து அவர் பதவி விலகியுள்ள நிலையில் ஆட்சியமைக்க எதிர்க்கட்சி முன்வராததால் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்தும்படி துணைநிலை ஆளுநர் தமிழிசை பரிந்துரைத்தார்.
இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் புதுச்சேரியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரகாஷ் ஜவடேகர் இதைத் தெரிவித்தார்.