இலங்கையில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறீசேனவிடம் விசாரிக்க வேண்டும் என விசாரணை ஆணைய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தன்று நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பில் 279 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதல் தொடர்பாக இந்திய உளவுத்துறை முன்கூட்டியே தகவல் தெரிவித்தும், அப்போதைய அதிபர் சிறீசேனவும், உளவுத்துறைத் தலைவர் நிலந்தா ஜெயவர்தனவும் அலட்சியமாக இருந்ததாக அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே அவர்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும், பாதுகாப்புத்துறையின் செயலாளர், காவல்துறை தலைவர் ஆகியோர் மீது வழக்குத் தொடர வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.