கொல்கத்தாவில் பாஜக தலைவர் ராகேஷ் சிங் மற்றும் அவருடைய இரண்டுமகன்களையும் போலீசார் கைது செய்ததில் நேற்று மாலை முதல் இரவு முழுவதும் பரபரப்பு நிலவியது.
பாஜகவின் இளைஞரணி செயலாளர் பமீலா கோஸ்வாமியை போலீசார் காரில் பல லட்சம் ரூபாய் கோகய்ன் போதைப் பொருள் வைத்திருந்ததாக விமான நிலையத்தில் கைது செய்ததைத் தொடர்ந்து . பமீலா ராகேஷ் சிங்கின் பெயரை இவ்வழக்கில் தொடர்புபடுத்தி வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாஜகவில் இணைந்த பிறகு 26 வழக்குகள் போடப்பட்ட ராகேஷை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது .கொல்கத்தா உயர்நீதிமன்றம் ராகேஷின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தது. இதனைத் தொடர்ந்து ராகேஷ் சிங்கை கைது செய்த போலீசார் கடமையை செய்யவிடாமல் தடுத்ததாக நேற்றிரவு அவருடைய இரண்டு மகன்களையும் கைதுசெய்தனர்.