செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
இந்தியா

வாட்ஸ் அப் வெளியிட்ட புதிய அப்டேட்.. ஏற்றுக்கொள்ளாவிட்டால் பயனரின் கணக்கு நீக்கப்படும்!

Feb 23, 2021 08:40:08 PM

வாட்ஸ்அப் நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள தனது தனியுரிமை கொள்கை அப்டேட்டை வரும் மே மாதம் 15-ம் தேதிக்குள் பயனர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் அவர்களின் வாட்ஸ அப் கணக்கு நீக்கப்படும் என தெரிவித்துள்ளது.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உலகின் முன்னணி குறுந்தகவல் செயலியான வாட்ஸ் அப்பை பயன்படுத்தாதவர்களே இருக்கமுடியாது. நாள்தோறும் உலகம் முழுவதிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்கள் இதனை பயன்படுத்துகிறார்கள். ஏனெனில் தொலைபேசி அழைப்பு அல்லது மின்னஞ்சல்களை பயன்படுத்துவதை விட வாட்ஸ்அப்பில் தகவல் பரிமாறிக் கொள்வது எளிது. மெசேஜ், டாக்குமெண்ட், வீடியோ காலிங், பேமண்ட் என பல விஷயங்கள் இருப்பதால் மக்களை வாட்ஸப் எளிதாக கவர்ந்துள்ளது.

சமீபத்தில் வாட்ஸ்அப் தனது தனியுரிமை கொள்கையில் மாற்றம் செய்தது. புதிய மாற்றத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு எழுந்ததை தொடர்ந்து தனியுரிமை கொள்கையை அமலாக்குவதை வாட்ஸ்அப் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது. இதனைத் தொடர்ந்து டெல்லியை சேர்ந்த கர்மான்யா சிங் ஷரீன் என்பவர் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஷியாம் திவான், பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பதில் வாட்ஸ்அப் நிறுவனம் பாகுபாடு காட்டுகிறது என வாதிட்டார்.

அப்போது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்கள் சார்பில் மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், அர்விந்த் தத்தர் ஆகியோர் ஆஜராகி, மக்களின் தகவல்களை பாதுகாக்க ஐரோப்பாவில் தனிச் சட்டம் உள்ளது என்றும், அது போன்ற சட்டம் இந்தியாவில் இல்லை என கூறினர். மேலும், இந்தியாவிலும் அது போன்ற சட்டத்தை இயற்றினால், அது கடைப்பிடிக்கப்படும் என வாதிட்டனர். வாதங்களை கேட்ட நீதிபதிகள், அதனை ஏற்பதாக கூறினர்.
மேலும் பல கோடி ரூபாய் மதிப்பை விட, தனிப்பட்ட தகவல்களை மக்கள் பெரிதாக கருதுவதாகவும், தனிப்பட்ட தகவல்களை பாதுகாப்பது தங்களின் கடமை என கூறினர். இந்த மனு தொடர்பாக 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசு, வாட்ஸ்அப், ஃபேஸ்புக் நிறுவனங்களுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தனியுரிமைக் கொள்கையை பயனர்களுக்கு சிறப்பாக வெளிப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. வெளிப்படை தன்மையுடன் அதனை பயனர்களுக்கு தெளிவாக எடுத்து கூறி வருகிறது. மேலும் எந்த வகையிலும், தனது செயலியை பயன்படுத்தும் நுகர்வோர் பகிரும் தகவல்களில் பாதுகாப்பு மற்றும் தகவல்தொடர்பு தனியுரிமையை சமரசம் செய்யக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயனாளரின் தரவு பாதுகாப்பில் எழும் எந்தவொரு குழப்பத்தையும் தீர்க்க வாட்ஸப் தொடர்ந்து கடுமையாக உழைத்து வருகிறது. இரு பயனாளர்களுக்கிடையே பகிரப்படும் எந்தவொரு தகவலும் நிறுவனத்தால் அறிய முடியாது. தனி நபர் மற்றும் வணிக கணக்கு இரண்டிலும் பகிரப்படும் தகவல்கள் மூன்றாம் நபரால் கண்காணிக்க முடியாது என்று தெரிவித்துள்ளது

இந்த நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தனது சேவை விதிமுறைகள் மற்றும் தனியுரிமைக் கொள்கை குறித்து ஒரு புதிய அப்டேட்டை வெளியிட்டது. அதனை வரும் பிப்ரவரி 8-ம் தேதிக்குள் ஏற்றுக் கொள்ள வேண்டும், இல்லை என்றால் வாட்சப் கணக்கு டெலிட் ஆகிவிடும் எனக் கூறியது. தற்போது இந்த காலக்கெடுவை வரும் மே மாதம் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

 




Advertisement
அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..
கேரளாவுக்கு விற்பனைக்காக கொண்டு செல்லப்பட இருந்த 850 கிலோ குட்கா பறிமுதல் 8 பேர் கைது
பிப்ரவரி மாத தரிசனத்துக்கான டிக்கெட்டுகள் கிடைக்கும் தேதிகள்
எஸ்.பி.ஐ.வங்கி கிளையில் கேஸ் கட்டர் மூலம் வெட்டி 19 கிலோ தங்க நகைகள் கொள்ளை என தகவல்
இந்திய மீனவர்களை சிறைப்பிடித்துச் சென்ற பாகிஸ்தான் கடற்படையினர் - விரட்டிப் பிடித்த கடலோரக் காவல்படையின்..
ஆந்திரா அருகே தக்காளி லோடு ஏற்றி சென்ற லாரி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்து
போடோலாந்து மஹோத்சவ் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
தேவ் தீபாவளியை முன்னிட்டு உத்தரப்பிரதேசம் முழுவதும் விழாக் கோலம்
மணிப்பூரில் மீண்டும் பதற்றமான சூழல்... கடத்திச் செல்லப்பட்ட 3 பெண்கள், 3 குழந்தைகளைத் தேடும் பணி தீவிரம்
ஒடிசாவில் இருந்து கர்நாடகத்திற்கு 23 வன உயிரினங்களை காரில் கடத்தி வந்த 3 பேர் கைது

Advertisement
Posted Nov 22, 2024 in இந்தியா,Big Stories,

அதானி குழுமத்தின் மீது அமெரிக்கா பகீர் புகார்.. அதிகாரிகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி லஞ்சம்? ப்ரூக்ளின் நீதிமன்றத்தில் மோசடி வழக்கு..

Posted Nov 22, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

சினிமா பாணியில் கொலை.. ஆட்டோ குணாவை ஊசியால் ஆப் செய்த திருநங்கைகள்..! வாசலில் காவல் காத்த மனைவி..

Posted Nov 21, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

“அந்த பையன் வேண்டாங்கா... தம்பியின் பேச்சை கேட்ட ஆசிரியைக்கு நேர்ந்த சோகம்..! பள்ளியில் கத்தி குத்து சம்பவ பின்னணி

Posted Nov 20, 2024 in உலகம்,Big Stories,

அமெரிக்க ஏவுகணைகளை ஏவிய உக்ரைன் அணு ஆயுதங்களை கையில் எடுக்கும் ரஷ்யா ஆட்டம் காணும் நேட்டோ நாடுகள்... அணு ஆயுதம் என்ற பிரம்மாஸ்திரம்.. உச்சகட்ட பதற்றத்தில் ரஷ்யா-உக்ரைன் எல்லை..

Posted Nov 20, 2024 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

புதிய தமிழ்ப் படத்தை 7 நாட்கள் கழித்து தான் விமர்சனம் செய்யனுமாம்..! கங்குவாக்கு விழுந்த அடி அப்படி..!


Advertisement