கொரோனா போன்ற அச்சுறுத்தல்களை எதிர்காலத்திலும் எதிர்கொள்ள உலகம் தயாராக இருக்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
சுகாதார துறை தொடர்பான பட்ஜெட் அமலாக்கம் குறித்த வெப் கருத்தரங்கில் பேசிய அவர், கொரோனாவுக்குப் பிறகு சுகாதார துறையில், இந்தியா மீதான உலகின் நம்பிக்கை பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது என்றார்.
பட்ஜெட்டில் சுகாதார துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதி அபரிதமானது என்றார் மோடி.
நோய்தடுப்பு மற்றும் நலவாழ்வு, அனைவருக்குமான சுகாதார சேவை, சுகாதார கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல், சுகாதார பணியாளர்களின் எண்ணிக்கையையும், செயல்திறனையும் அதிகரித்து, திட்டமிட்ட இலக்குடன் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும் மோடி உறுதி அளித்தார்.