ஆந்திராவில் கழுதை இறைச்சி விற்பனை அதிகரித்திருப்பதால், கழுதைகளின் எண்ணிக்கை அங்கு வேகமாக குறைந்து வருகிறது.கழுதை இறைச்சியை உண்டால், வலிமையும், வீரியமும் கிடைக்கும் என்ற நம்பிக்கையே இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
கிருஷ்ணா, மேற்கு கோதாவரி, பிரகாசம், குண்டுர் உள்ளிட்ட மாவட்டங்களில் சட்டவிரோதமாக கழுதை இறைச்சி விற்கப்படுகிறது. ஆந்திராவில் போதிய கழுதைகள் இல்லாததால் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ராஜஸ்தானில் இருந்து கழுதைகள் இறைச்சிக்காக கொண்டுவரப்படுகின்றன.
கழுதையை இறைச்சிக்கு பயன்படுத்துவது சட்டவிரோதம் என கூறியுள்ள அதிகாரிகள் அதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.