கிழக்கு லடாக்கில் இருந்து இந்திய-சீன படைகள் வாபஸ் பெறப்படுவதை உன்னிப்புடன் கவனிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
எட்டு மாத கால பதற்றத்திற்குப் பிறகு எல்லைப்பகுதியில் உள்ள பாங்கோங் ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரையில் இருந்து இந்தியாவும், சீனாவும் தங்களது படையினரை திரும்ப அழைத்துக் கொள்ள முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகள் துவங்கி உள்ளன.
இது குறித்து தமது தினசரி செய்தியாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், பதற்றத்தை தணிக்க இரு நாடுகளும் எடுத்துள்ள முயற்சியை வரவேற்பதாக கூறினார்.
கிழக்கு லடாக் எல்லை நிலவரத்தை அமெரிக்கா கண்காணித்து வருவதாகவும் அவர் கூறினார்.