மத்திய பிரதேச காங்கிரஸ் எம்எல்ஏ நிலே தாகாவின் குடும்பத்தினருக்கு சொந்தமான வணிக வளாகத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனையில் கணக்கில் வராத 450 கோடி ரூபாய்க்கான ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி அன்று பெதுல் மற்றும் சத்னா மாவட்டங்களில் உள்ள 22 இடங்கள், மும்பை மற்றும் கொல்கத்தாவிலும் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.
கணக்கில் வராத 8 கோடி ரூபாய் ரொக்கப்பணம், வெளிநாட்டு கரன்சிகள், 9 வங்கிகளின் விவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இந்த சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டன.
8 கோடி ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்த அதிகாரிகள், சோயா, ஷெல் நிறுவனங்களில் கணக்கில் வராத பணபரிவர்த்தனையும் கண்டுப்பிடித்தனர்.