காவிரி ஆற்றின் உபரி நீரை தமிழகத்திற்கு வழங்க மாட்டோம் என்று கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
காவிரி-வைகை-குண்டாறு நதிகள் இணைப்புத் திட்டத்தின் முதல் கட்டத்திற்கான அடிக்கல்லை தமிழக அரசு அமைத்தது குறித்து மத்திய அரசிடம் கர்நாடக அரசு ஆட்சேபனை தெரிவிக்கும் என்றுக் கூறினார். மாநில நலனைக் காக்க வலுவான நடவடிக்கைகளை எடுக்கும் என்று கூறிய முதலமைச்சர் எடியூரப்பா, எந்த காரணத்திற்காகவும் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்கள் காவிரி உபரி நீரை பயன்படுத்த நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று குறிப்பிட்டார்.
தமிழகத்தின் திட்டம் தொடர்பாக மத்திய அரசிடம் மாநில அரசு தனது ஆட்சேபனைகளை தெரிவித்து அதை தடுத்து நிறுத்த அனைத்து முயற்சிகளையும் செய்யும் என்று துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.