பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்பதற்காக சீன அதிபர் சி ஜின்பிங் இந்தியா வர உள்ளார்.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் மாநாடு இந்த ஆண்டின் மத்தியில் நடைபெற உள்ளது.
இந்தியா சீனா இடையே எல்லைப் பிரச்சினைக்கு ராணுவ உயரதிகாரிகள் பத்து சுற்று பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதையடுத்து சீன அதிபரின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா இந்த ஆண்டு பிரிக்ஸ் மாநாட்டை நடத்த உள்ளதற்கும் சீனா தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
கோவிட் சூழலைப் பொருத்து இந்த ஆண்டு மாநாடு காணொலி வாயிலாக நடைபெறாது என்றும் கூறப்படுகிறது.