பிகில் படத்தில் வில்லனாக நடித்த, நடிகர் ஐ.எம்.விஜயனுக்கு கேரள காவல்துறை பதவி உயர்வு வழங்கி உள்ளது.
முன்னாள் இந்திய கால்பந்து வீரரான இவர், இந்திய அணியின் கேப்டனாகவும் இருந்துள்ளார்.
கால்பந்தாட்டத்திலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் கேரள காவல் துறையில் பணியாற்றி வருகிறார்.இதேபோல் திரைப்படங்களிலும் நடித்து வரும் ஐ.எம்.விஜயன் தமிழில் திமிரு, கொம்பன், பிகில் உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ளார்.
இந்நிலையில், கேரள காவல்துறை தனக்கு உதவி கமாண்டண்ட் ஆக பதவி உயர்வு வழங்கி உள்ளதாக விஜயன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
class="twitter-tweet">I am glad to inform you all that I have been promoted as Assistant Commandant of Kerala Police. pic.twitter.com/aRN8ZsrtUB
— I M Vijayan (@IMVijayan1) February 20, 2021