மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பாதுகாப்பை அதிகரிப்பதற்காக இந்திய கடற்படையை சேர்ந்த இரண்டு அதிவேக ரோந்து படகுகள் பாம்பன் குந்துகால் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தடைந்தன.
மன்னார் வளைகுடா கடல் பிராந்தியம் வழியாக இலங்கைக்கு கஞ்சா, மஞ்சள், கடல் அட்டை உள்ளிட்டவையும், அங்கிருந்து இந்தியாவிற்கு தங்கமும் கடத்தப்பட்டு வருகிறது.
இதனை தடுக்கும் வகையிலும் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையிலும், மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய இரண்டு ரோந்து படகுகள் சென்னையில் இருந்து குந்துகால் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தடைந்தன.