வரும் 25ம் தேதி ”பசு அறிவியல்” குறித்த ஆன்லைன் தேர்வில் மாணவர்கள் பங்கேற்பது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள 900 பல்கலைக்கழகங்களுக்கு பல்கலை மானியக்குழு கடிதம் எழுதி இருந்த நிலையில், அதற்கு கேரள சாஸ்திரிய சாகித் பரிஷத் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அறிவியல் ஆதாரமற்ற விஷயங்களை யுஜிசி ஊக்கப்படுத்துவதை ஏற்க முடியாது என கூறி உள்ள அந்த அமைப்பு, அந்த கடிதத்தை திரும்ப பெறவும் வலியுறுத்தி உள்ளது.