உத்தரக்கண்ட் மாநிலம் சமோலியில் இந்தியக் கடற்படை - விமானப்படையினர் இணைந்து ஹெலிகாப்டரில் சென்று,பனிச்சரிவால் உருவான ஏரியின் ஆழத்தை அளவிட்டனர்.
உத்தரக்கண்ட் மாநிலம் சமோலியில் பனிப்பாளங்கள் சரிந்து உருகி ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் ரிசிகங்கா நீர்மின் திட்டத்தில் பணியாற்றிய அறுபதுக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பனிப்பாளங்களுடன் பாறைகளும் சரிந்து விழுந்ததில் தபோவனுக்கு ஐந்து கிலோமீட்டர் முன்பாக ஆற்றில் ஒரு ஏரி உருவாகியுள்ளது.
இந்த ஏரி உடைந்தால் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக வல்லுநர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் கடல் மட்டத்தில் இருந்து 14ஆயிரம் அடி உயரமுள்ள அந்த இடத்தில் இந்திய விமானப்படையின் ஹெலிகாப்டரில் சென்று கடற்படை நீர்மூழ்கி வீரர்கள் மீயொலிக் கருவியின் மூலம் ஏரியின் ஆழத்தை அளவிட்டனர்.