லடாக் எல்லையில் உறைபனிக் குளிரால் அவதியுறும் ராணுவ வீரர்களுக்காக மாசு ஏற்படுத்தாத சூரிய சக்தியில் இயங்கும் இதமான கூடாரத்தினை ஒருவர் வடிவமைத்துள்ளார்.
அங்குள்ள சோனம் வான்ங்சுக் என்பவரால் கண்டறியப்பட்டுள்ள இக்கூடாரம், 30 கிலோ எடை கொண்டதாகவும் 10 பேர் வரை மிதமான வெப்பநிலையில் உறங்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி வெளியே மைனஸ் 15 டிகிரி வெப்பநிலை நீடித்தாலும் கூடாரம் 15 டிகிரி வெப்பநிலை கொண்டதாக இருக்குமென அவர் தெரிவித்தார்.
மாசு ஏற்படுத்தும் ஹைட்ரோகார்பன் எரிபொருள் பயன்பாட்டிற்கும் இது மாற்றாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.