நாட்டில் சின்ன வெங்காயத்தை தொடர்ந்து பெரிய வெங்காயத்தின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக பேசிய மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் உள்ள லாசல்கான் வெங்காய சந்தை வியாபாரிகள், கடந்த மாதத்தில் மகாராஷ்டிராவில் மீண்டும் பருவம் தவறி பெய்த மழையால் வெங்காய சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது என்றனர்.
இதனால் சந்தைக்கு வெங்காய வரத்து குறைந்துள்ளது என்றும் நாசிக் சந்தையில் பெரிய வெங்காயம் தற்போது குவிண்டால் ஒன்றுக்கு 3,500 ரூபாய் முதல் 4,500 ரூபாய் வரை விற்கப்படுகிறது என்றும் தெரிவித்தனர். வரத்து குறைவு காரணமாக வரும் நாட்களில் பெரிய வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்கக் கூடும் என்றும் கூறினர்.