நாடு முழுவதும் 100 மாவட்டங்களில் உள்ள பயிர் சேதத்தை மதிப்பீடு செய்ய ஆளில்லா குட்டி விமானங்களை பயன்படுத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வேளாண் அமைச்சகத்திற்கு விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் வழங்கி உள்ள அனுமதியின் மூலம் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், பயிர் பாதிப்புகளை சரியாக மதிப்பீடு செய்து, அதற்குண்டான காப்பீடூ தொகையை விரைவாக விவசாயிகளுக்கு பெற்றுத்தர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
ஓராண்டுக்கு இந்த அனுமதியை அளித்துள்ள விமான போக்குவரத்து அமைச்சகம், எனினும், இதனை செயல்படுத்துவதற்கு முன்பு, உள்துறை, ராணுவம் மற்றும் உள்ளூர் நிர்வாகத்திடம் முறையாக அனுமதி பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.