கிழக்கு லடாக்கில் படைகளை திரும்ப பெற்று, முன் இருந்த கள நிலைமைக்கு திரும்ப இந்தியாவும், சீனாவும் தீர்மானித்துள்ள நிலையில், எல்லை தொடர்பான பிரச்சனைகளை பற்றி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி-உடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இரு நாட்டு எல்லை பிரச்சனை தொடர்பாக விவாதிக்க இந்த இருவரும் அந்தந்த நாடுகளால் சிறப்பு பிரதிநிதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
3 ஆயிரத்து 488 கிலோ மீட்டர் நீளமுள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதியை மாற்ற எந்த தரப்பும் தன்னிச்சையான நீக்கங்களை எடுத்துவிடக்கூடாது என்பதில் சிறப்பு பிரதிநிதிகள் உறுதியுடன் இருந்து அதை கண்காணிப்பர் என்று கூறப்படுகிறது.