வங்கிப் பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பான புதிய விதிகளை ஆறு மாதத்துக்குள் வகுக்க ரிசர்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாடிக்கையாளர் கடன் நிலுவையைக் கட்டவில்லை எனக் கூறி அவரது பாதுகாப்புப் பெட்டகத்தை யுனைடெட் வங்கி உடைத்துத் திறந்து நகைகளை எடுத்தது தொடர்பான வழக்கில் மூன்று லட்ச ரூபாய் இழப்பீடு கோரியதற்கு முப்பதாயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கத் தேசிய நுகர்வோர் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து வாடிக்கையாளர் தொடுத்த வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், வாடிக்கையாளருக்கு எழுத்து மூலம் தெரிவிக்காமல் அவரது பாதுகாப்புப் பெட்டகத்தை வங்கி உடைத்துத் திறக்கக் கூடாது எனத் தெரிவித்தது.
பாதுகாப்புப் பெட்டகம் தொடர்பான புதிய விதிகளை ஆறுமாதத்துக்குள் வகுக்கும்படி ரிசர்வ் வங்கிக்கு உத்தரவிட்டது.
வாடிக்கையாளருக்கு இழப்பீடாக 5 லட்ச ரூபாயும், வழக்குச் செலவுக்கு ஒரு லட்ச ரூபாயும் கொடுக்க யுனைடெட் வங்கிக்கு உத்தரவிட்டது.