உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் பகுதியில் இரண்டு தலித் சிறுமிகள் கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் சிறுவர்கள் 2 பேரை கைது செய்துள்னர்.
மூன்று தலித் பெண்களுக்கு தண்ணீரில் பூச்சிக் கொல்லி மருந்து கொடுத்து கொல்ல முயற்சித்த நிலையில் ஒரு பெண் உயிர் பிழைத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், தன்னை ஒரு பெண் வெறுத்து ஒதுக்கியதால் தண்ணீரில் விஷம் கலந்து குடிக்கச் செய்ததாகவும் அப்பெண்ணின் உறவினர்களான சிறுமிகளும் அந்தத் தண்ணீரைக் குடித்துவிட்டதாகவும் கைது செய்யப்பட்ட வினய் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.
ஆனால் புதர்களில் துப்பட்டாவால் கைகால் கட்டப்பட்ட நிலையில் தனது 16 வயது மகளின் சடலத்தை வயல்காட்டில் கண்டெடுத்ததாக உயிரிழந்த பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளார்.