நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் வாழ்க்கை வரலாற்றை இளைஞர்கள் படிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய அவர், நேதாஜியின் வாழ்க்கைப் பயணத்தில் இருந்து இளைஞர்கள் ஏராளமான பாடத்தைக் கற்றுக் கொள்ள முடியும் என்றார்.
நேதாஜியின் 125வது பிறந்த தினத்தை கொண்டாடுவதற்காக பிரதமர் மோடி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அமித்ஷா, நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் நிகழ்வாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.