ஹெலிகாப்டரில் இருந்து ஏவி, எதிரிகளின் டாங்குகளை அழிக்க உதவும் ஹெலிநா ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாகம் என்று பெயர்சூட்டப்பட்டுள்ள ஏவுகணைகள், எதிரிகளின் டாங்குகளை தாக்கி அழிக்கும் வல்லமை பெற்றவை. இந்த ஏவுகனையில் 5 ரகங்கள் உள்ளன.
அதில், ஹெலிகாப்டரில் இருந்து ஏவித் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஹெலிநா ஏவுகணைகள் ராஜஸ்தானில் பரிசோதிக்கப்பட்டுள்ளன.
ஏஎல்ஹெச் துருவ் ஹெலிகாப்டரில் இருந்து 4 ஏவுகணைகள் 7 கிலோமீட்டர் வரையிலான தூரங்களுக்கு ஏவப்பட்டதாகவும், அவை வெற்றிகரமாக இலக்கை தாக்கி அழித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஹெலிநா ஏவுகணைகள் ராணுவம் மற்றும் விமானப்படையில் இடம்பெற்றுள்ளன.