காதலனுடன் சேர்ந்து குடும்பத்தினர் 7 பேரைக் கொன்றதற்காகத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள சப்னம், உத்தரப்பிரதேச ஆளுநரிடம் மீண்டும் கருணை மனு தாக்கல் செய்துள்ளார்.
அம்ரோகாவைச் சேர்ந்த சப்னம் தனது காதலுக்குக் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் இரவில் உறங்கச் செல்லுமுன் அவர்களுக்குப் பாலில் மயக்க மருந்து கலந்து கொடுத்து உறங்கியபின் காதலனுடன் சேர்ந்து கோடரியால் கழுத்தை வெட்டிக் கொன்றுள்ளார்.
தாய் தந்தை அண்ணன் அண்ணி அவர்களின் 10 மாதக் குழந்தை, தம்பி, தங்கை ஆகியோரைக் கொன்றுவிட்டு நாடகமாடியது விசாரணையில் தெரிந்தது.
இந்த வழக்கில் சப்னத்துக்கும் அவள் காதலன் சலீமுக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
சப்னத்தின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட நிலையில் அவளின் 12 வயது மகன் தனது தாய்க்காகக் குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்துள்ளான்.
சப்னத்தின் சார்பில் உத்தரப்பிரதேச ஆளுநர் ஆனந்திபென் பட்டேலிடம் மீண்டும் ஒரு கருணை மனு அளிக்கப்பட்டுள்ளது.